இன்னிக்கு காளான் கொத்துக்கறி வீட்ல செய்யலாமா..
- 500 கிராம் காளான்கள் (பெரிய அளவில் வெட்டவும்)
- 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய் (நறுக்கியது)
- 1 தக்காளி (நறுக்கியது)
- 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/4 தேக்கரண்டி உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- கொத்தமல்லி தழை (அலங்கரிக்க)
காளானை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும் மேலும் காளான் சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அவ்ளோதான் சுவையான காளான் கொத்துகறி தயார்.
