ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவைத் தொடர்ந்து ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் அரசு விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்ற 300 தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 300 தமிழக மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

What do you think?

‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்!!!

சிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி!