வதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்

போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டதாக சென்னை வண்ணாரப்பேட்டை விவகாரம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வண்ணாரப்பேட்டையில் போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும், காவலர்கள் மீது செருப்பு, கற்கள் வீசி தாக்குல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர் என்றும், விஷமிகள் சிலர் இணைந்து இப்போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

What do you think?

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

மத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்!