தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதனை தொடர்ந்து மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
மதுரையில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கு முன்னோட்டமாக தற்போது 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மதுரை, பெருங்குடியில் உள்ள விமான நிலைய நுழைவு வாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வெண்கல திருவுருவச் சிலையினை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது விசிக கட்சியின் நிறுவுனர் எம்.பி. திருமாவளவன் உடன் இருந்தார்.