இந்திய மாநிலங்களில் கடன் வாங்கும் பெண்கள் குறித்த புள்ளி விவரத்தை கிரிப் ஹைமார்க் என்ற கடன் தரவுகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் கடன் வசதியை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் பெறுவதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும், தெலங்கானா 5வது இடத்திலும் உள்ளது.
அதேபோல் வணிக கடன், சொத்து கடன் ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், தனிநபர் கடனில் முதலாவது இடத்திலும் உள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
“ஊடகங்களில் ஒரு செய்தி! தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே!.வீடு – வணிகம் – சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி. பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, #IWD2023-இல் மகிழ்ச்சியான செய்தி!” என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு:
ஊடகங்களில் ஒரு செய்தி!
தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே! (1/3) pic.twitter.com/a8a3b905Mr
— M.K.Stalin (@mkstalin) March 8, 2023