‘கமலுக்கு சினிமாதான் தெரியும்’ முதலமைச்சர் பழனிச்சாமி அதிரடி!

கமல்ஹாசனுக்கு சினிமாவை பற்றி மட்டும்தான் தெரியும், மற்ற துறைகளை பற்றியெல்லாம் தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “ராஜகண்ணப்பனுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுகதான், எங்கள் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விலாசமின்றிதான் போவர்கள்” என கடுமையாக சாடினார்.

மேலும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் பணி நடக்கிறது. மற்ற பணிகள் விரைவில் துவங்கும் என என்னிடம் உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.

கமல்ஹாசன்

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் கமல்ஹாசன் தமிழகம் பல்வேறு துறைகளில் பின்தங்கி இருப்பதாக கூறுகிறார். அவருக்கு அரசின் துறைகள் பற்றி என்ன தெரியும், சினிமாதான் தெரியும். தமிழகம் பெற்றுள்ள தேசிய விருதுகள் பற்றி தெரியுமா?, மற்றபடி யாராவது எழுதி கொடுத்தால் படிப்பார். இந்தியாவிலேயே, பல துறைகளில் அதிக தேசிய விருதுகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இது படத்தில் நடிக்கும் கமலுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்று அதிரடியாக கூறினார்.

What do you think?

‘சன்னிலியோனாக வேண்டும்’ பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் அதிரடி அறிவிப்பு!

‘முத்தம் கொடுக்காதீர்கள்’ எச்சரிக்கும் பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து!