புது டெல்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைப்பெற்றது. அதில் பேசிய அவர், இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியில் அனைத்து இந்திய மக்களும் எதிர்ப்பின்றி இந்தியை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.
I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers. Tamil Nadu rejects any form of Hindi hegemony and imposition. Our language and heritage define us – we won't be enslaved by Hindi!… pic.twitter.com/gNiJ2TGtKm
— M.K.Stalin (@mkstalin) August 5, 2023