பிரபல துணிகடை குடிநீர் தொட்டியில் மிதந்த கரப்பான் பூச்சிகள்..!! வைரலாகும் வீடியோ..!!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிரபல துணி கடையில் குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் மக்கள் அதிர்ச்சி. நிர்வாகத்திடம் கூறியும் முறையான பதில் இல்லாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கரப்பான் பூச்சி இருப்பதை எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பிரபல தனியார்க்கு சொந்தமான துணி கடையில் (ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்) 5 தளமாக செயல்பட்டு வருகிறது. மூன்றாம் தளத்தில் உள்ள உணவகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாடிக்கையாளர் அருந்தியபோது குடிநீர் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளார்.
பார்த்த வாடிக்கையாளர்க்கு குடிநீர் தொட்டியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கரப்பான் பூச்சி இருந்த அந்த குடிநீரை பருகிய சிலர் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்தனர்.
வாடிக்கையாளர்கள் பருக வைத்திருந்த குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சிகள் இருந்தும் மிதந்தும் காணப்பட்டதை கண்டு நிர்வாகத்திடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு நிர்வாகம் முறையான பதிலளிக்கவில்லை என கூறபடுகிறது. பின்னர் வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து குடிநீரில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்தும், கரப்பான் பூச்சி இருந்த குடிநீரை குடித்தவர்களுக்கு ஏதேனும் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் யார் பொறுப்பு என்றும் இப்படி அலட்சியமாக செயல்படுகிறீர்களே என்று சரமாரி கேள்வி எழுப்பிய நிலையில் அங்கு சிறிது நேரம் உணவகத்தில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருக்கும் வகையில் குடிநீர் தொட்டியை அவசர அவசரமாக சுத்தம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் வருகை தரும் இந்த பிரபல துணி கடையில் வாடிக்கையாளர்கள் அருந்த வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது. .
குடிநீரில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு நிலவிய நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரபல துணி கடையில் உள்ள உணவகத்தில் முறையான சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.