தலைமுடி உதிர்வை தடுக்க அற்புத தீர்வு..!
தேங்காய்பால்:
தேங்காய் பாலில் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே வாரத்தில் இரு முறையாவது தேங்காயில் இருந்து பால் எடுத்து அத்னை தலையில் தேய்த்து ஊறவைத்து பின் அலசி வர தலைமுடி ஆரோக்கியமாக நீண்டு வளரும்.
முட்டை:
முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியே எடுத்து அதனை நன்றாக அடித்துக்கொண்டு தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து பின் மைல்டான ஷாம்பூ கொண்டு தலையை அலசி வர தலைமுடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும். இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தலாம்.
வினிகர்:
வினிகரில் பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் அதிகமாக உள்ளதால் கால் கப் வினிகரை, அரை கப் நீரில் கலந்து அதனை தலையில் தேய்த்து ஊறவைத்து பின் தலையை அலசி வர பொடுகு தொல்லை நீங்கி தலைமுடி சீராக நீண்டு வளரும்.