பெண்களே இது உங்களுக்குத்தான்..!
மட்டன் குழம்பு மற்றும் கிரேவி சமைக்கும்போது கறியில் சிறிது கொட்டை பாக்கு சேர்த்து வேகவைத்தால் மட்டன் சீக்கிரமே வெந்துவிடும்.
எண்ணெய் சூடானதும் அதில் சிறிது மைதா மாவு சேர்த்து பின் பொரித்தால் வாணலில் ஒட்டாது.
தோசை மாவு தயார் செய்ததும் ஊற்றும் நேரத்தில் மோர் கலந்து சுட்டால் சுவையாக இருக்கும்.
டீ போட்ட பிறகு மீதமுள்ள சக்கையை கொண்டு எண்ணெய் பாத்திரம் தேய்த்தால் ஈசியாக சுத்தம் ஆகிவிடும்.
சேனைக்கிழங்கு நறுக்கும்போது கையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி பின் நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்ப்படாது.
கீர் செய்யும்போது சேமியாவிற்கு பதிலாக துருவிய கேரட் அல்லது சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
கீரை வடை செய்யும்போது அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து செய்தால் வடை மொறு மொறுவென இருக்கும்.
பாயாசத்தில் முற்றிய தேங்காயை நறுக்கி நெய்யில் வதக்கி சேர்த்தால் டேஸ்டியாக இருக்கும்.
சாதம் மீந்துபோனால் அதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சிறிது சீரகம், உப்பு கலந்து பிழிந்து காயவைத்தால் சாத வத்தல் தயார்.
தேங்காய் தண்ணீரை சட்னி அல்லது குழம்பில் சேர்க்க சுவையாக இருக்கும்.
கொத்தமல்லி மற்றும் சீரகத்தை வறுத்து அரைத்து அதனை புளிக்குழம்பு செய்து இறக்கும்போது சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.
பள்ளிபாளையம் சிக்கன் செய்யும்போது நீளமான மிளகாய் வற்றல் சேர்க்காமல் குண்டு மிளகாய் சேர்க்கலாம்.
பால் பாயாசத்துக்கு பாதாம் பருப்பு அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
முருங்கைக்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதனை நறுக்கி காற்று புகாத டப்பா மற்றும் கவரில் வைத்தால் கெடாமல் இருக்கும்.