அக்டோபர் 23ஆம் தேதிகோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோவிலின் முன் கார் சிலிண்டர் வெடித்தது.அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. ஜமேசா முபின் என்பவரால் இயக்கப்பட்ட கார் கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் முன் வெடித்தது அந்த காரில் வெடிமருந்துகள் இருந்ததும் முபின் வீட்டில் வெடிமருந்துகள் இருந்ததும் தெரியவந்தது..
இதை தொடர்ந்து விசாரித்தபோது முபீன் என்பவர் இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் என்பதும் 2019ம் ஆண்டு என்ஐஏ விசாரணையில் இருந்துள்ளார் மேலும் அசாருதீன் உடன் தொடர்பிளும் இருந்துள்ளார்.. இதனால் கோவை கார் வெடிப்பும் தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்தவிவகாரம் பெரிதான தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உயரதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின் முதல்வர்,கோவையில் கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும்,மக்கள் அதிகம் வாழும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கும் பரிந்துரைத்தார்.