விஜய் டிவி புகழ் தனது திருமண தேதியை அறிவித்துள்ள நிலையில் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவையாக நடித்து மகிழவைத்த புகழ் தற்போது அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் குவிந்துவருகின்றன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கூட இதனைக் குறிப்பிட்டு புகழைப் பாராட்டியுள்ளார்.
புகழ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947, சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. மேலும் தற்போது ‘ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
கோவையை சேர்ந்த பென்ஸியாவை காதலித்துவருவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார்.
இந்நிலையில் புகழ் தனது நீண்டநாள் காதலியை வருகிற செப்.5 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.