வெள்ளிபதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோவை மாணவி தன்யதா ..!!
ஆசிய ஷாம்பியன் ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில்.., இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் இருந்து. கோவையை சேர்ந்த தன்யதா(17)
என்ற 12ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டுள்ளார்.
இதில் இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனி பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத்தில் 2கிமி பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.
“ஆசிய அளவிலான டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்”.
இரவு விமானம் மூலம் கோவை வந்த வீராங்கனையை உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் நேற்றைய முன்தினம்.., இந்தியா சார்பில் முதன் முறையாக வெள்ளிபதக்கம் வென்ற தன்யதாவை, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியா விற்கு பெருமை சேர்த்த மாணவியை மதிமுகம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து.. பேச தொடங்கினோம்.
வெற்றி குறித்து காரணம் கேட்ட பொழுது சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம்.., ஒரு சிறு சைக்கிள் போட்டியில் தொடங்கியது தான் இந்த சாதனை.
ஒரு நாள் நண்பர்களுடன் சைக்கிள் போட்டி வைத்தோம் அதில் நான் முதலில் தோற்று போனேன்.., என்னை சுற்றி இருந்த அனைவரும் என்னை கேளி செய்தார்கள். மறு நாள் விளையாடும் பொழுது கீழே விழுந்தேன், அப்பொழுது என்னை சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள்.
மறுநாள் போட்டி ஆரமிக்கும் பொழுது யாரிடமும் அவமான படகூடாது.., கைதட்டு வாங்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மனதில் வெறியோடு விளையாட ஆரமித்தேன்.., நான் நினைத்தது போல் அதில் வெற்றி அடைந்தேன். அதை என் அப்பாவிடம் சொன்னேன், அதற்கு அப்பா கேட்டார். இந்த வெற்றி இன்று ஒரு நாள் மட்டும் போதுமா..? இல்லை தொடர்ந்து வேண்டுமா என்று கேட்டார்.
நான் தொடர்ந்து வேண்டும் என்று கேட்டேன், அதற்கு அவர். என்னை சைக்கிள் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார். சில காலம் பயிற்சியிலேயே நான், சைக்கிள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.., அந்த நாளில் இருந்து என் கனவு “இந்தியாவிற்காக விளையாடி பதக்கம் வெல்வது மட்டும் தான்”.
அன்று என் தந்தை கொடுத்த ஊக்கமும், பயிற்சியாளர் கொடுத்த ஊக்கமும் தான், என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.., என்று பேசினார்.
மேலும் இதுபோன்ற பல உண்மைகதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..