கோவை வெள்ளங்கிரி மலையில் அடுத்தடுத்து நடந்த கொடூரம்..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!!
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வெள்ளங்கிரி மலையில் பக்தர்கள் சுயம்புவை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு வரும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் மயங்கி விழுவோரை காப்பாற்ற மருத்துவ வசதிகளும் இல்லை என பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் சீசன் நேரத்திலாவது மருத்துவ முகாம்களை அமைத்து உயிர்களை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கோவையை 3 பேர் வெள்ளங்கிரி மலையை ஏறிய போது உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது தகவலின் பெயரில் அங்கு வந்த வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் செல்வதற்குள் பாண்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மாதம் முதல் இதுவரை வெள்ளியங்கிரி மலைக்கு வந்த 5 பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இதய பிரச்சினை இருப்பவர்கள், ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள், வேறு ஏதேனும் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..