முடி உதிர்வை தடுக்க இந்த ஒரு பொருள் போதும்..!
அன்னாசி பூ வாசனைக்காவும் சுவைக்காகவும் மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறது. அன்னாசி பூவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அது முடி உதிர்வை தடுத்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவில் அன்னாசி பூ எவ்வாறு முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
அன்னாசி பூ என்பது பண்டைய சீன காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் ஒரு வகை மசாலா பொருளாகும். இதன் நட்சத்திர வடிவை வைத்தே இதனை அடையாளம் காணலாம். அன்னாசி பூவில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதினால் இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
கொலாஜன் சருமம், முடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
அன்னாசி பூ முடிக்கு கொடுக்கும் நன்மைகள்:
- அன்னாசி பூவில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் இருக்கும் தொற்றுக்களை அகற்றி முடி உதிர்வை தடுக்கிறது. இதில் உற்பத்தியாகும் கொலாஜன் முடியின் வேர்களை வலுவாக்கும். முடியின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமைகிறது.
- அன்னாசி பூவில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் முடி மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாற்ற உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
- அன்னாசி பூ ஆயில்: அன்னாசி பூ எண்ணெயை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்வதினால் முடியின் வேர்கள் வலுவடைகிறது.
- அன்னாசி பூ பேக்: அன்னாசி பூ பொடியை தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயுடன் கலந்து தலையில் பேக் போட்டால் முடி உதிர்வு குறைந்து முடி வளர்ச்சி அடையும்.
- அன்னாசி பூ ஷாம்பூ: அன்னாசி பூ பயன்படுத்தி உருவாகும் ஷாம்பூவை பயன்படுத்தும்போது முடி ஆரோக்கியமாக இருக்கும்.
அன்னாசி பூவை பயன்படுத்தி முடிக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து தலைமுடியை ஆரோக்கியமாக வளர்க்கலாம். இயற்கையான முறையில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அன்னாசி பூ சிறந்தது.