‘நீ அந்த காலேஜ்ல தான படிக்கிற’ சென்னையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து!

சென்னையில் பிரிசிடென்சி கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்.

பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் நேரு என்ற மாணவர் தனது நண்பருடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவர்கள் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை பேருந்து நிலையம் சென்றபோது, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் நேருவின் பைக்கை வழிமறித்துள்ளனர்.

பின்பு நேருவின் ஐடி கார்டை பிடுங்கிய அவர்கள் ”நீ பிரசிடென்சி கல்லூரியில் தான படிக்கிற” என்று கேட்டுவிட்டு கத்தியால் நேருவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம்பட்ட மாணவர் நேருவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில், மாணவர் கார்த்திக் போலீசிடம் மாட்டிக்கொள்ள அவரது நண்பர்கள் தப்பித்துவிட்டனர். மேலும் கார்த்தியிடம் சுமார் ரண்டரை அடி நீளமுள்ள கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் ஆவடியில் வைத்து பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் , பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

‘கொரோனாவால் என்னால் இதை கூட செய்யமுடியவில்லை’ புலம்பும் டிரம்ப்!

‘Free Pass’ இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணியை விமர்சிக்கும் தெ. ஆ.கேப்டன்!