சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள்… கடலில் மாயமான சோகம்..!
சென்னையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் 19 பேர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மாமல்லபுரத்திற்கு சுற்று பயணம் மேற்க்கொண்ட அவர்கள் 7 இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் இறுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாரத விதமாக வந்த ராட்சத அலையில் 3 பேர் சிக்கியுள்ளனர். இதில் அம்பத்தூரை சேர்ந்த ரோஷன் (21) என்பவர் கடல் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு பேர் கடலில் மாயமாகினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கடலோர பாதுகாப்பு போலீஸார் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு கடலில் மாயமான மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நண்பர்களோடு ஆசையாக சுற்றுலா சென்ற போது அரங்கேறிய இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.