ஹெல்தியான ஓட்ஸ் குக்கிஸ்…
தேவையான பொருட்கள்:
ரோல்டு ஓட்ஸ் – 1 கப்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 2 கப்
உப்பில்லா வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
நாட்டு சர்க்கரை – 1 கப்
காய்ச்சிய பால் – 1/2 கப்
கோகோ பவுடர் – 1/4 கப்
க்ரன்ச் பினட் பட்டர் – 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
உப்பு – சிட்டிகை
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, நாட்டு சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதில் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.
பின் க்ரன்ச் பினட் பட்டர், வெண்ணிலா எசென்ஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அதில் ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து கலந்து விட வேண்டும்.
கேக் ஊற்றும் அச்சில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் தயாரித்த ஓட்ஸ் கலவையை வட்டமாக தட்டிக்கொண்டு 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அவ்வளவுதான் ஓட்ஸ் குக்கிஸ் தயார்.
