நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்..!!
பிளாக் ஷீப் (Black Sheep) என்ற யு டூப் சேனல் மூலம் ஒரு துணை காதாபாத்திர கேரக்டரில் நடிக்க தொடங்கியவர் தான் “பிஜிலி ரமேஷ்”.. அதன் பின் நகைச்சுவை தொடரில் கலந்து கொண்டு தனக்கென்று ஒரு வசனம்., தனக்கென்று ஒரு காமெடியன் என்ற கேரக்டரில் மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினார்.. குறிப்பாக “இது தான் தவறான செயல்” என்ற வசனமும் பாபா முத்திரையை காண்பித்தும் நகைச்சுவை வசனங்களை பேசி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்..
அதன் பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு மூலம் பிரபலமான ஒருவராக மாறினார்., தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கோமாளியாக சேர்ந்து மக்களை சிரிக்க வைத்தார்., அந்த நிகழ்ச்சிக்கு பின் தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2019-ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதன் பின் கோமாளி., ஜாம்பி, பொன்மகள் வந்தாள்., ஆடை., எல்.கே.ஜி போன்ற பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை மிக மோசமாகி படுத்த படுக்கையில் இருந்த பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..