நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் “விஸ்வேஷ்வர ராவ்” முக்கியமான ஒருவர்.., எம்ஜிஆர் படங்கள் முதல் வானத்தை போல, பிதாமகன், உன்னை நினைத்து, போன்ற படங்களிலும், சின்னத்திரையில் நகைச்சுவை கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரங்கள் வரை நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை அவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது மறக்க முடியாத ஒன்று.
இந்நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக காலமான விஸ்வேஷ்வர ராவ் இன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானர்.., இந்த செய்தி தற்போது திரைஉலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஸ்வேஷ்வர ராவின் உடல் சென்னை சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நம்மை ரசிக்க வைத்து, அவரது ஆன்மா சாந்தி அடையவும். அவரது குடும்பத்தின் சார்பாகவும் மதிமுகம் சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..