மாணவி அளித்த புகார்..! அமைச்சர் முத்துசாமி போட்ட உத்தரவு..!
ஈரோட்டில் நடைபெற்ற அமைச்சர் நிகழ்ச்சியில் 10ஆண்டுகளாக செயல்படாத நூலகத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கல்லூரி மாணவி கொடுத்த கோரிக்கை மனு குறித்து உடனடியாக நூலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி நூலகத்தினை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்…
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 5வார்டு பகுதியான எல்லப்பாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு தாய்மார்களுக்கு அரசின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா என்பவர் பொது நலநோகத்துடன் எல்லப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகாலமாக செயல்படாத நூலகம் இருப்பதால் மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இதன் பின்னர் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர் முத்துசாமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் செயல்படாத நூலகத்தினை திறந்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது நூலகத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கரையான் அரித்து வீணாக இருப்பது குறித்து ஆய்வு செய்தார்.இதன் பின்னர் நூலகம் பயன்பாடு இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்பது அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் அந்த கல்லூரி மாணவியிடம் நூலகத்தில் உள்ள புத்தகத்தினை கணக்கெடுப்பு செய்தும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் என்ன என்பது குறித்து தெரிவிக்குமாறும் அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாணவிக்கு உறுதியளித்தார். இந்த நூலகம் பயன்பாட்டுக்கு வந்தால் அருகில் உள்ள 5ஊரை சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மனு வழங்கிய உடனே அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை எடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..