கா்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம்..!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு..!!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கா்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 23- ஆம் தேதி மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு நடைபெற்றது. இந்நிலையில் பெங்களூருவில் இனறு முழு அடைபுக்கு கர்நாடக நீர் பாதுகாப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் முக்கிய இடங்கலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரும் 29-ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
மருந்தகம், உணவகம் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஓலா, உபர் ஓட்டுநர் சங்கங்கள் முதலில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வாபஸ் பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஓசூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எல்லையிலேயே தமிழக பேருந்துகள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா, பெங்களூர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தபட்டுள்ளன.
அதேபோல், திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு செல்லும் 17 பேருந்துகள் முதல் நடையில் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் தெரிவித்துள்ளார்..
இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றம் தீர்ப்புதான் கடைசி தீர்ப்பு என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம், பேரணி நடத்துவது தவறு எனவும் கூறினார்.
உச்சநீதிமன்றமும் தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வந்தால் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..