உங்களுடைய பற்கள் வெண்மையாக இருக்கா..?
நம்முடைய பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதினால் நம்முடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆரோக்கியம் என்பது நம் வாழ்விற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பற்களை சுத்தமாகவும் வெண்மையாகவும் வைத்துக் கொள்வதினால் அது நம்முடைய முக அழகையே கூட்டும். வயதாக வயதாக நம்முடைய பற்களின் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறமாகும் இதனை தவிர்க்க நாம் ஒருசிலவற்றை கடைபிடித்தால் போதும், அப்படி சிலவற்றை இப்போது பார்ப்போம்.
- ஒரு சிலர் வெளிப்படையாக சிரிக்க முடியாதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பற்கள் மஞ்சளாக இருப்பது தான். அப்படி மஞ்சளாக உள்ள பற்களை வெண்மையாக மாற்ற வீட்டிலிருந்தே சில வழிகளை பின்பற்றலாம்.
- உப்பு ஒரு ஸ்பூன், கடுகு எண்ணெய் அரை ஸ்பூன் ஆகியவற்றை கலந்து பற்களில் விரல்களை கொண்டு தினமும் இருவேளை என மசாஜ் செய்து தேய்த்து வர பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கும்.
- ஆரஞ்சு தோலிலை ஆப்பிள் சைடர் வினிகரில் தோய்த்து மஞ்சள் கரை இருக்கும் பற்களில் தேய்த்து வர பற்கள் வெண்மையாக மாறும்.
- மார்கெட்டுகளில் விற்கப்படும் பேக்கிங் சோடா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவை கலந்திருக்கும் பற்பசையை வாங்கி நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
- அன்றாடம் இருவேளை என கட்டாயமாக பற்களை துலக்குதல் என்பதை பின்பற்ற வேண்டும்.
- மது குடித்தல், புகை பிடித்தல் ஆகிய தீய பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
- வாழ்க்கையில் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- வாழைப்பழம், எலுமிச்சை ஆகிய பழங்களின் தோலினை கொண்டு பற்களில் தேய்த்து வர பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையானது அகன்று பற்கள் வெண்மையாக மாறும்.