60வது வயதில் திருமணம் செய்துகொண்ட காங்கிரசின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்!

தன்னுடைய 60வது வயதில் தனது நீண்ட தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முகுல் வாஸ்னிக். இவர் தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் பூர்வீகமாக கொண்ட இவர், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்து வருகிறார். மேலும் காங்கிரசின் ஆடசிகாலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த முகுல் வாஸ்னிக் தற்போது தன்னுடைய 60 வயதில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த திருமண விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், அசோக் கெலோட், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

What do you think?

‘காய்ச்சல், சளி இருந்தால் திருப்பதிக்கு வர வேண்டாம்’ தேவஸ்தானம் அறிவிப்பு!

‘கேப்டனாக பொறுப்பேற்கும் நட்சத்திர வீரர்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!