காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?

நடிகர் விஜய் பாஜக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அக்கட்சியில் அவர் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளைய தளபதி என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய், சமீபகாலமாக அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவரது பேச்சுகள் அனைத்தும் அதிமுக, பாஜக கட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சாடுவது போன்று உள்ளது. அதேபோல் தொடர்ந்து விஜய்யின் படங்கள் வெளிவரும் போதும் அரசு தரப்பில் இருந்து ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி அதிமுக பிரமுகர்கள். பாஜக தலைவர்கள் ஆகியோரும் விஜய் மீது அடிக்கடி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்காக நெய்வேலியில் இருந்த விஜய்யை, வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களது காரிலேயே அழைத்து வந்ததும், இரண்டு நாட்களாக விசாரணை செய்ததும், அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. திமுக, காங்கிரச் கட்சியினரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

விஜய்யின் பேச்சுகளை வைத்து பார்க்கும்போது அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. தனியாக கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அழகிரியின் இந்த அழைப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அதிமுகவின் நெருக்கடி, பாஜகவின் ஐடி ரெய்டு என பலவிதமான தொந்தரவுகளை சந்தித்து வரும் விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைவாரா அல்லது தனியாக கட்சி தொடங்குவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What do you think?

துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…!

உத்தரபிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மெகா தங்க சுரங்கங்கள்