மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் களத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் மக்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படும்.
- ரூ.500க்கு கேஸ் சிலிண்டர், 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும்.
- பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.