தமிழிசை சனாதனத்தை ஒழிக்க முடியாது என்று கூறுகிறாரே உடன்கட்டை ஏறுவதை ஒழித்தார்களா இல்லையா அதே போல் சனாதானம் ஒரு நாள் ஒழிக்கப்பட வேண்டும் : செல்வ பெருந்தகை, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர்
இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மதுரை வழியாக சென்னை செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
இன்று இம்மானுவேல் சேகரன்66 ஆவது நினைவேந்தல் குருபூஜையில் கலந்து கொண்டு வந்துள்ளேன். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நீண்ட நாள் கோரிக்கை உள்ள இமானுவேல் சேகரன் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்துள்ளார் அவரது நினைவிடத்தில் சிலை வைக்கமுதல்வர் அறிவித்துள்ளார் அதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு:
செல்லூர் ராஜு அவர்களுக்கு மதுரை அரசியல் தெரியும், தமிழக அரசியல் தெரியாது, இந்திய அரசியல் தெரியாது. அவர் கான்ஸ்டியூஷனை படிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று 1960 இல் கலைஞர் கூறியிருக்கலாம் 1967-க்கு பிறகு பல மாநிலங்களில் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் சேர்ந்து நடத்த வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. இதற்கு முக்கியமான காரணங்கள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோபாலசாமி போன்றவர்கள் தெளிவாக கூறியுள்ளனர் .
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் திருத்தும் கொண்டுவர 5 சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் அது அதை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. குறிப்பாக ஆறு மாத காலகட்டத்திலும் கொண்டுவர முடியாது அது குறித்து சட்ட திருத்தம் மசோதா விவாதங்கள் சட்ட வல்லுநர் குழு ஆலோசனை செய்ய வேண்டும் பாஜகவினர் சட்ட திருத்தம் கொண்டு வர தயாராக உள்ளனர். அம்பேத்கர் எழுதிய சட்டத்தை சிதைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம் அதை ஈசியாக பண்ண முடியாது அதை தொட்டால் ஷாக் அடிக்கும் பாஜகவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் நிறைய உள் கருத்துக்கள் உள்ளது. செல்லூர் ராஜு போன்றவர்களுக்கு நட்பாசை இருக்கலாம் ஆறு மாதத்தில் தேர்தல் நடந்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவாக இருக்கலாம்
அந்தக் கனவு நிறைவேறாது.
ஜி 20 மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று இதைவிட முக்கியமான சான்று இல்லை முன்னுதாரணம் இல்லை ஜனநாயகத்தை சிதைப்பது தான் பாஜகவின் நோக்கம். உலகத் தலைவர்கள் டெல்லியில் வந்து இறங்கும் வரை இந்தியா என்றும் போகும்போது. பிரைம் மினிஸ்டர் ஆப் பாரத் என பெயர் மாற்றி உள்ளனர்.
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவைப் பற்றி என்ன மதிப்பு வைத்திருப்பார்கள் அளவீடு வைத்திருப்பார்கள் நமது பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது.
கனாதானம் குறித்த கேள்விக்கு:
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் புதிதாக எதுவும் கூறவில்லை புரட்சியாளர் அம்பேத்கர் பாராளுமன்றத்தில் இந்து கோட் வில் என்னும் சட்ட திருத்தம் கொண்டு வரும் போது பெண்களுக்கு சம உரிமை . பெண்களை உடன்கட்டை ஏற்றக்கூடாது என சனாதனத்தில் உள்ளது. இதையெல்லாம் நீக்க வேண்டும் என்றும் நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என அம்பேத்கர் கூறினார்.
ஆனால் பாஜக அவரை கையில் பிடித்துக் கொண்டு அம்பேத்கரின் கனவுகளை நினைவாக ஆக்குகிறோம் என கூறுகிறது. அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் க்கு கூறிய அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் .
1952, 56 ல் டாக்டர் அம்பேத்கரின் பாராளுமன்ற உரைகளை செல்லூர் ராஜு மற்றும் பாரதிய ஜனதாவினர் படிக்க வேண்டும் ஒரு மனிதன் இறந்தால்அவரது மனைவி உடன்கட்டைஏற வேண்டும் என்று கூறியதை சட்ட திருத்தத்தின் மூலம் மாற்றி அமைக்கப்பட்டது.
தமிழிசை கூறுகிறாரே சனாதனத்தை ஒழிக்க முடியாது என்று கூறுகிறாரே உடன்கட்டை ஏறுவதை ஒழித்தார்களா இல்லையா அதே போல் சனாதானம் ஒரு நாள் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.