பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கொடுத்த அந்த வாக்குறுதி..?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை சென்ற போது பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மகாராஷ்டிரா நந்துர்பர் பகுதியில் மக்களின் முன் பேசிய ராகுல் காந்தி, ‘‘இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். வளர்ச்சியில் அவர்களுக்கான விகிதாசார பங்கு கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். 50 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகை கொண்ட கிராமங்களை காங்கிரஸ் அரசு ஆறாவது அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார மற்றும் நிதி கணக்கெடுப்பு நடத்தப்படும். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். வன உரிமை சட்டம் அல்லது நில கையகப்படுத்தும் சட்டங்களை பாஜக பலவீனப்படுத்தியது. நாங்கள் அவற்றை வலுப்படுத்துவது மட்டுமின்றி பழங்குடியினரின் கோரிக்கைகளை ஒரே ஆண்டில் தீர்த்து வைப்போம் என என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..