தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்..?
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன 8-வது அமைப்பில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த பாஜக பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை ஒத்திருப்பதாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மோடி விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாகவும், இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி ராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிராக புகார் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது நிதி நிலை குறித்து தவறான தகவலை கூறியதாக திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் மீதும் புகார் அளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..