ராகுல் காந்தி முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்கிரஸுடன் இணைந்தார்…
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் (YSR) தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். (YS ) ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். (YS ) ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்(YSR) தெலுங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.
தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்த அவர், தேர்தலில் வாக்குகள் பிளவு படுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, ஒய்எஸ்ஆர் (YSR) தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லி அலுவலகத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மேலும் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் ஷர்மிளா இணைத்துக்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளதாகவும், இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.