காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்..!!
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தில் இருந்த சென்ற தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்ததை தொடர்ந்து 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்..
இந்த தகவலை அறிந்த மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்…
இந்த கடிதம் குறித்து மயிலாடுதுறை எம்.பி சுதா அவரது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அக்கடித்ததில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது..
“செப்டம்பர் 21, அன்று 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாகவும் உங்களுக்கு எழுதுகிறேன்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா என்னிடம் கூறியதாவது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சம்பவத்தன்று ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றனர். அப்போது மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படடு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என ராகுல் காந்தி கூறியதாக பதிவிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..