மதுராந்தகத்தில் மணிப்பூர் கலவரம் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!
மதுராந்தகம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது மணிப்பூரில் பா.ஜா.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது, என். பைரோன் சிங் முதலமைச்சராக உள்ளார். அவர் மெய்த்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர். பா.ஜா.க -32, காங்கிரசு-5, ஜெ.டி.யூ.-6, நாகாலாந்து மக்கள் முன்னணி (N.P.F.)-7, மற்றவர்கள் 10 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மெய்த்தேயி வகுப்பைச் சார்ந்த சிலர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வழக்குத் தொடுத்தனர்.
இதனால் மலைவாழ் பழங்குடியினரான குக்கி-சோமி, நாகா இன பழங்குடி மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று அச்சமடைந்தனர். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பழங்குடிகளின் தலைவர் தின்காங்க் லூங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி முரளிதரன், பழங்குடி தலைவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார்.
மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடி யினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். பா.ஜ.க ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.
இந்நிலையில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த வஞ்ச நெஞ்சம் கொண்ட இளைஞர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.., அதுமட்டுமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆங்காங்கே.., மணிப்பூர் பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் பல மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் என்றும், செய்யூர் பஜார் வீதியில் இருந்து மெழுகுவர்த்தி கையில் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று வருகின்றனர்.