மோடிக்கு காங்கிரஸ் கட்சி எழுதிய எதிர்ப்பு கடிதம்?

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அதீர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அந்த பதவிக்கு உயர்நிலை நியமனக்குழுவால் அவர் பரிசீலிக்கப்படவோ பரிந்துரைக்கப்படவோ இல்லை என்றும், அந்த பதவிக்காக சஞ்சய் கோத்தாரி விண்ணப்பிக்க கூட இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்யவும், உயர்நிலை குழுவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

‘சாம்பிள்ஸ் தருகிறேன்’ ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!