இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை 18 திருக்கோவில்களில் திருமண மண்டபங்கள், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், காதுகுத்தும் மண்டபம், வணிக வளாகம், திருக்கோவில் பள்ளி, கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கலையரங்கம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மண்டலா இணை ஆணையர் அலுவலகம், ஓதுவார் பயிற்சிப் பள்ளி போன்ற 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.29) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர். பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.