உங்களுக்கு வயிற்றுப்புண் இருக்கா..?
வைட்டமின் சி அதிகமாக நிறைந்திருக்கும் உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடிய நெல்லிக்காய் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளதால் இது வயிற்றுப்புண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
நார்சத்து அதிகமாக உள்ள வாழைப்பழத்தை தினம் ஒன்று என்ற வீதம் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.
குடைமிளகாயை அடிக்கடி உணவில் சமைத்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.
கீரைகளில் இருக்கும் பலவிதமான சத்துகள் மற்றும் குளிர்ச்சி தன்மை வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
வைட்டமின் சி யை அதிகமாக பெற்றுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.
நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள ஆப்பிள், பேரிக்காய், ஓட்ஸ் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வயிற்றுப்புண்ணை குணப்படுத்தலாம்.
வயிற்றுப்புண்ணிற்கு பாதாம் பருப்பு ஒரு நல்ல மருந்தாகும். பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளைகளிலும் சாப்பிட்டு வரலாம்.
பசும்பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்து வர வயிற்றுபுண் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
பசும்நெய்யை வயிற்றுபுண் உள்ளவர்கள் சாப்பிட்டு வர நல்ல நிவாரணியாக இருக்கும்.
தினமும் வெறும் வயிற்றின் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும்.