“தொடரும் கனமழை.. அதிகரித்த பலி எண்ணிக்கை..” மீட்பு படையினர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடுகளின் மேல் விழுந்துள்ளது.., மேலும் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது.
அந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவ வீரர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல அமைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேசமயம், அவ்வப்போது சில மோசமான வானிலை ஏற்படுவதால் மீட்புப் பணியினரால் தொடர்ந்து பணி செய்ய முடியவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது 3வைத்து நாளாக முண்டகை மற்றும் சூரல் மலை நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 287 சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்., மேலும் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்டெடுக்க வாய்ப்புள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை சூரல் இடத்திற்கு வந்து மரங்கள் மற்றும் மண்ணை அகற்ற வேண்டும்., ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ளதால், மீட்புப்பணி பெரும் சவாலாக இருப்பதாகவும் மீட்பு படையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது சேதமடைந்துள்ள பெய்லி பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ராணுவப் படையினர் சரி செய்து வருகின்றனர். இந்த தற்காலிக பெய்லி பாலத்தின் கட்டமைப்பு மறுபுறம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் மீட்புப் பணியாளர்கள் பேரிடர் பகுதிக்குச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த தொடர் கனமழை காரணமாக வயநாடு பகுதிக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைமைச் செயலாளர் வேணு உள்ளிட்டோர் மேற்பார்வையிட வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், அதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கேரளா முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று வயநாடு வரவுள்ளதாகவும் தொடர்ந்து நிவாரண முகாம்களைப் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..