தொடர் கனமழை..!! சேதமான 80 ஏக்கர் நிலம்..!! விவசாயிகள் வேதனை..!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வேடந்தாங்கல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்ததால் சுமார் 80 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கடும் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.. கடந்த நான்கு நாட்களுக்கு முன் செங்கல்பட்டு., மதுராந்தகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
அதன் காரணமாக வேடந்தாங்கல் சரணாலயம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.. இந்த கனமழை காரணமாக வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் சித்திரகுடம் வளையபுத்தூர்., விநாயக நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 80 ஏக்கர் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது..
மழை காரணமாக அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு மூன்று தினங்களாக மழை இல்லாததால் பயிரிலுள்ள தண்ணீரை வெளியேற்றி வந்த நிலையில் வேடந்தாங்கல் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் பாசன கால்வாய் சரியில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் வயல்வெளியில் செல்வதால் தண்ணீர் வடியாமல் அப்படியே நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை உள்ளது..
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் அறுவடைக்கு தயாராக வைத்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவது விவசாயிகள் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை உள்ளது.. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..
நீரில் மூழ்கி பயிர்கள் நாசமாக காரணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பாசன கால்வாய் பொது பணித்துறையினர் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டதால்., இந்த நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..