இந்த 5 பழக்கம் இருக்கா..? அப்போ நீங்கதான் புத்திசாலிகள்..!
ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவது என்பது எளிதான விஷயமில்லை. ஒருவர் எடுக்கும் முடிவுகள், பழக்கவழக்கங்கள், அவர்களின் திறன்கள் ஆகியவற்றையும் அடக்கிய ஒரு செயலாகும்.
நாம் இந்த பதிவில் ஒருவரின் புத்திசாலிதனத்தை கணக்கிட உதவும் 5 பழக்கங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தொடர்ந்து கற்றல்:
இவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றலை பின்பற்றுவார்கள். புத்தகங்களை வாசித்தல், வகுப்புகள் எடுத்தல், புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளுதல் ஆகியவை அவர்களின் அன்றாடம் ஒரு செயலாக இருக்கும். மூளைக்கு தொடர்ந்து கற்றல் என்பது உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும். இது புதிதாக நரம்பணு இணைப்புகளை உருவாக்குவதுடன் நினைவாற்றலை அதிகரித்து உதவுகிறது.
ஆர்வம்:
புத்திசாலிகள் எல்லா நேரமும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள். அவர்கள் தங்களின் சுற்றுபுறத்தை கவனித்து பலவித செயல்களை அறிய கவனம் செலுத்துவார்கள்.
பகுப்பாய்வு சிந்தனை:
ஒரு விஷயங்களை பகுப்பாய்ந்து முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டவர்கள் புத்திசாலிகள். இவர்கள் பிரச்சனையை வேறுவேறு பார்வையில் பார்ப்பார்கள். இதனால் தெளிவான ஒரு முடிவையும் எடுப்பார்கள்.
படைப்பாற்றல்:
இவர்கள் புதிதாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் கற்பனை திறனை வளர்த்து வழக்கமான முடிகளை எடுக்காமல் புதிதான ஒரு தீர்வை கண்டுபிடிப்பார்கள்.
சமூக திறன்கள்:
புத்திசாலிகள் மற்றவர்களுடன் எளிமையாக பழகும் திறன் கொண்டவர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு குழுவாக செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். சமூக திறன் என்பது வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியவற்றில் முக்கியமான ஒன்றாகும்.