சமையல் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்…!
கடலை எண்ணெயில் ஒமேகா 6 எனும் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது.
100 கிராம் கடலை எண்ணெயில் 884 கலோரி சக்தி இருக்கிறது.
இதில் லப்பிடுகள் அதிகரிப்பால் நல்ல கொழுப்புகள் சேர்ந்து கெட்டை கொழுப்புகளை அழிக்கிறது.
நோய் எதிர்ப்பு பொருளான ரெசவராடால், இதயநோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். நரம்பு வியாதிகள் மற்றும் நோய் தொற்றை தடுக்கிறது.
துணை ரசாயன பொருளான பீட்டா சிட்டோஸ்டிரால் கெட்ட கொழுப்பை உறிஞ்சி இதயத்தை பாதுகாக்கிறது.
தேங்காய் எண்ணெய் ஜீரண சக்தியை கூட்டும்.
சருமத்தில் சுருக்கம் மற்றும் வறண்டு போவதை காக்கிறது.
கல்லீரல் , சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கிறது.
உடற்தசைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.
மாரடைப்பை தரக்கூடிய தசைக் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
இதில் காணப்படும் லாரிக் அமிலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
கூந்தலுக்கு ஊட்டமளிக்கக்கூடியது.
நல்லெண்ணெய் நோய் முறிவிற்கு உதவும்.
நல்லெண்ணெய் சூடு செய்து பயன்படுத்தும் போது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடியது.
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது தோலை அது மிருதுவாக்கும்.
இதில் கால்சியம் பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்தை கொண்டுள்ளது.
சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்த மூலம்,மூச்சு பிரச்சனைகள் மற்றும் தோல் தொல்லைகள் குறையும்.
இதில் இருக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப்பொருள் மனதில் இருக்கும் கவலை மற்றும் மனச்சோர்வை நீக்கும்.
இரத்த குழாயில் கொழுப்பு சேராது,தொப்பை குறையும், முதுமையை தடுக்கும் தன்மை கொண்டது.
இதய நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.