தமிழத்தாய் வாழ்த்து சர்ச்சை..!! துணை முதலமைச்சர் உதயநிதி விளக்கம்..!!
தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மட்டுமின்றி துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்..
ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.. அப்போது தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஒரு சில பாடல் வரிகள் விடுபட்டது., இதனை சுதாரித்த துணை முதலமைச்சர் உதயநிதி மீண்டும் ஒருமுறை பாடலை ஒலிக்க செய்தார்..
இதற்கு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்..
அப்போது அவர் பேசியதாவது.. “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை யாரும் தவறாக பாடவில்லை. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் அவர்கள் குரல் கேட்கவில்லை.
எனவே மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் பாடப்பட்டது., அதன் பின்னர் தேசிய கீதமும் சரியாக ஒலிக்கப்பட்டது.. இது தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு இதனை யாரும் பெரிதாக்கி விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. என இவ்வாறே அவர் பேசியிருந்தார்.