காரசாரமான கார சட்னி..!
வெங்காயம் 3 நறுக்கியது
பூண்டு 2 பற்கள்
தக்காளி 1 நறுக்கியது
மிளகாய் 12
உப்பு தேவையானது
புளி
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கி பின் மிளகாய்,உப்பு,புளி சேர்த்து வதக்கவும்.
அதனை நன்றாக ஆறவைத்து நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் காரசாரமான கார சட்னி தயார்.