Corona Virus : 3,000-த்தை நெருங்கும் உயிர்பலி!

சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். சீனாவைத் தொடர்ந்து உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 56 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் வைரஸ் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

CornoVirus : 3,000 நெருங்கும் உயிர்பலி !

சீனாவில் 78,824 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் 8,715 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இதுவரை 2,788 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது

What do you think?

‘திரெளபதி’ – சாதிகள் உள்ளதடி பாப்பா!

அமித்ஷா காணாமல் போய்விட்டார்; சிவசேனா விமர்சனம்!