‘கார்த்திக்கும் பிரச்சினை கொடுத்த கொரோனா’ தயாரிப்பாளரின் அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 5,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த கொரானா வைரஸ் தமிழ் திரையுலகையும் பாதித்துள்ளது என்று தான் கூறவேண்டும். ஆம் இதனால் ரஜினியின் அண்ணாத்த, விக்ரமின் கோப்ரா உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த கொரோனா வைரஸால் நடிகர் கார்த்தியும் பாதிக்க்பட்டுள்ளார்.  நடிகர் கார்த்தி தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனாவினால் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் அப்டேட் தாமதமாகியுள்ளது மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்க என்று அறிவித்துள்ளார்.

What do you think?

‘மத்திய அரசின் முடிவால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்’ பொதுமக்கள் அதிர்ச்சி!

கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு