‘கேரளாவில் மருத்துவரை தாக்கிய கொரோனா’ தனிமைப்படுத்தப்பட்ட 30 மருத்துவர்கள்!

கேரளாவில் கொரோனா பாதித்த மருத்துவருடன் பணியாற்றிய 30 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6, 518 ஆக உயர்ந்தது. அதே போல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1, 69, 610 ஆகவும் உயர்ந்தது.

இந்தியாவிலும் நாளைக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்று கேரளா. கேரளாவின் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் மார்ச் 2ம் தேதி ஸ்பெயினில் இருந்து கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருடன் பணியாற்றிய 30 மருத்துவர்கள் மற்றும் சில துணை மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதித்த அந்த மருத்துவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களையம் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

What do you think?

கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் தமிழரின் உணவு!

கொரோனாவிற்காக தனி WebSite-யை உருவாக்கிய கூகுள் நிறுவனம்!