வர்த்தகத்தையும் முடக்கிய கொரோனா!

கொரோனா அச்சத்தால் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்து வருகின்றது. இன்று பங்குச்சந்தை தொடங்கிய போதே முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிந்துள்ளன. கடந்த 6 நாட்களில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 11 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர். சர்வதேச அளவில் உலக முதலீட்டாளர்கள் சுமார் 250 லட்சம் கோடி ரூபாய்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

What do you think?

சென்னை அருகே பேருந்து – லாரி விபத்து; பெண் பலி

நியூசிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்