‘A வகை ரத்தம்’ இருந்தால் கொரோனா வருமா? சீனாவின் பகீர் தகவல்!

A வகை ரத்தம் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ளதாக சீனாவின் புதிய ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 7,988 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீன ஆய்வாளர்கள் வுஹானில் உள்ள 2 மருத்துவமனைகளிலும், ஷென்சென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

SARS-CoV-2 என்ற பரிசோதனையைப் பயன்படுத்தி 2,173 நோயாளிகளின் இரத்த வகைகளை வைத்து 3,694 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான மக்களுடன் கொரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டு ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,775 நோயாளிகளில், 37.75 % பேர் A ரத்த வகைகளையும், 9.10 % பேர் O ரத்த வகையையும் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் ஓ வகை ரத்தம் இருப்பவர்களைவிட A வகை ரத்தம் இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆய்வு நடத்தப்பட்ட வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையில் வைரஸால் கொரோனா வைரஸால் மொத்தம் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 41.26% பேர் A ரத்த வகை கொண்டவர்கள் என்பதும் 25% சதவீதம் பேர் O ரத்த வகை கொண்டுள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் A வகை ரத்தம் கொண்டவர்கள் அதிகமாக பயப்பட தேவையில்லை என்றும் அதே போல O வகை ரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என்று அர்த்தமில்லை என்றும் அனைவருமே அரசு அதிகாரிகள் கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

சரவணா ஸ்டோர்ஸுக்கு சீல்

‘யாரும் வராதீங்க’ கொரோனாவால் வீட்டின் முன்பு போர்டு வைத்த செங்கோட்டையன்