கொரோனா எச்சரிக்கை; பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தொற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவ-மாணவிகள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, தும்மல், இருமல் ஏற்படும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது பரவி வரும் கொரோனாவுக்கு மட்டுமல்லாமல், தொற்று நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள உதவும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

நாளை கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் – சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்?

ஸ்மார்ட் சிட்டிக்கே இந்த நிலையா? – செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் இடிந்து விழுந்த ரவுண்டானா!