இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை தேசிய பேரிடராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்திருந்தனர்.

தற்போது மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அவர், மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பனைஸ் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

What do you think?

மீளமுடியாத சரிவில் பங்குச்சந்தை!

மத்தியபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்