கட்டுக்குள் வராத கொரோனா; பலி எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு

மக்கள் உயிர்களை காவு வாங்கும் உயிர்க்கொல்லி வைரஸான கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

சீனாவில் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸூக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹூபே மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 72,436 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடைபட்டுள்ளனர். மேலும், சீனாவின் சுற்றுலாத்துறையும் முழுவதுமாக முடங்கியுள்ளது.

What do you think?

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது

சென்னை ஷாஹின்பாக்; தொடரும் 5-வது நாள் போராட்டம்