8,000 நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை !

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,000 நெருங்குகிறது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமில்லாமல் இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட 165 நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,214 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000 நெருங்கியுள்ளது. சரியாக இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 7, 988 பேர் கொரோனா வைரஸ் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் 3,237 பேருடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக இத்தாலியில் 2,503 பேரும் ஈரானில் 988 பேரும் ஸ்பெயினில் 533 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 82,762 பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கொரோனாவால் ஜோதிகாவுக்கு வந்த சோதனை!

‘கொரோனா முன்னெச்சரிக்கை’ தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!